ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...!

Update: 2023-09-25 00:54 GMT
Live Updates - Page 4
2023-09-25 02:27 GMT

நான்கு பேர் கொண்ட துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

2023-09-25 02:22 GMT

 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி முதல் தங்க பதக்கத்தை வென்றது. 

2023-09-25 02:21 GMT

சாதனை படைத்த இந்தியா !

துப்பாக்கி சுடுதல் Series 6: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா புதிய சாதனை படைத்தது. 1893.7 புள்ளிகள் பெற்று இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 19- ஆம் தேதி பாகுவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் சீனா வைத்த ரெக்கார்ட் ஆன 1893.3 புள்ளிகள் என்பதை இந்தியா இன்று முறியடித்துள்ளது.

1.India: 1893.7

2. Korea: 1890.1

3. China: 1888.2

2023-09-25 01:51 GMT

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு பதக்கத்திற்கான போட்டியில் 4 சுற்றுகளின் முடிவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கொரியா மற்றும் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா பதக்கத்தை அறுவடை செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2023-09-25 01:37 GMT

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா  இன்று பங்கேற்கும் போட்டிகளின் விவரம்


2023-09-25 01:36 GMT

ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று 5 பதக்கங்களை இந்தியா வென்ற நிலயில், இன்றும் பதக்க வேட்டையை தொடருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2023-09-25 01:02 GMT

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு காலை 6.30 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சார்பில், ருத்ரன்க்‌ஷ் பாட்ட்டீல், ஐஸ்வாரி பிரதாப் சிங் தோமர், திவ்யன்ஷ் சிங் பன்வார் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

2023-09-25 00:59 GMT

ஜிம்னாஸ்டிக்ஸ்: மகளிர் தகுதி சுற்று சப் டிவிஷன் 1 பிரிவு ஆட்டம் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியா சார்பில் பிரணதி நாயக் பங்கேற்கிறார். இவர் 2019 ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

Tags:    

மேலும் செய்திகள்