ஆசிய விளையாட்டு; பதக்க பட்டியலில் 7ம் இடத்தில் இந்தியா...!

Update: 2023-09-24 00:56 GMT
Live Updates - Page 3
2023-09-24 05:28 GMT

டேபிள் டென்னிஸ் போட்டியின் இந்தியாவின் மணிகா பத்ரா தோல்வி

டேபிள் டென்னிஸ்; 16-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ராவும் தாய்லாந்தின் பர்னாங்கும் மோதினர். இதில் 7-11 1-11 11-13 என்ற செட் கணக்கில் இந்தியாவின் மணிகா பத்ராவை தாய்லாந்து வீராங்கனை வீழ்த்தினார். இதனால், மணிகா பத்ரா வெளியேற்றப்பட்டார்.

2023-09-24 05:08 GMT

ஆடவர் ஹாக்கி போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை இந்தியா 16-0 என்ற கணக்கில் வீழ்த்தியது

2023-09-24 04:46 GMT

ஆண்கள் ஹாக்கி: முதல் பாதி நேர ஆட்ட முடிவில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 7-0 என முன்னிலையில் உள்ளது.

2023-09-24 04:26 GMT



2023-09-24 04:18 GMT

ஆசிய விளையாட்டு போட்டி: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம்

சீனாவில் நடைபெறும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரு மேலும் ஒரு பதக்கம் பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா வெண்கலம் வென்றார்.

2023-09-24 04:06 GMT

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு இதுவரை 4 பதக்கங்கள்

சீனாவில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி இதுவரை 4 பதக்கங்களை வென்றுள்ளது.

  • துப்பாக்கி சுடுதல்: ஆஷி சவுக்‌ஷி, மெகுலி கோஷ் ரமிதா ஆகிய வீரர்கள் இணை- வெள்ளி பதக்கம்
  • துடுப்பு படகு லைட் வெயிட் : அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங்; வெள்ளி பதக்கம்
  • துடுப்பு படகு: பாபு லால், லேக் ராம் - வெண்கல பதக்கம்
  • துடுப்பு படகு ( 8 வீரர்கள்) - வெள்ளி பதக்கம்

என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது.

2023-09-24 03:43 GMT

துடுப்பு படகு போட்டியில் இந்திய அணிக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது. 5.43 நிமிடங்களில் இலக்கை கடந்து இந்தியா பதக்கம் வென்றுள்ளது

2023-09-24 03:33 GMT

துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது

துடுப்பு படகு போட்டியில் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் உறுதியாகியுள்ளது. ஆண்கள் இணை துடுப்பு படகு இறுதி போட்டியில் இந்தியாவின் பாபு பால் மற்றும் லெக் ராம் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. 6:50.41s நேரத்தில் இலக்கை கடந்து இந்திய அணி வெண்கலம் வென்றது

2023-09-24 03:21 GMT

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், இன்று நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை பந்தாடியது.

52 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.

2023-09-24 03:10 GMT

இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆசிய விளையாட்டு போட்டி: 20 ஓவர் போட்டி: வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்