டேபிள் டென்னிஸ் பெண்கள் அணியில் தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். தற்போது முகர்ஜி விளையாடி வருகிறார்.
ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட் அரையிறுதி போட்டி- இந்திய அணிக்கு 52 ரன்கள் இலக்காக நிர்ணயம்
ஆசிய விளையாட்டு: மகளிர் டி 20 போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி 17.5 ஓவர்களில் 51 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களை வென்றது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டியில் அடுத்தடுத்து 2 வெள்ளி பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய மகளிர் அணியும் துடுப்பு படகு போட்டியில் ஆண்க்ள் அணி வெள்ளி பதக்கமும் வென்றுள்ளது.
துப்பாக்கிச்சுடுதல்: வெள்ளி பதக்கத்தை நெருங்கியது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டி 10 மீட்டர் ஏர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் ரமிதா மற்றும் மெகுலு இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவின் ரமிதா, மெகுலி, சவுஸ்கி ஆகிய வீராங்கனைகள் 1886 புள்ளிகள் ஸ்கோர் செய்துள்ளனர். சீனாவுக்கு (1896.6) அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இதனால், இந்தியாவுக்கு வெள்ளி பதக்க வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.
வங்களதேசம் அணி 9.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
துடுப்பு படகு போட்டி: பெண்கள் லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் கிரண் மற்றும் அன்ஷிகா பார்தி 9வது இடத்தைப் பிடித்தனர். 7:40:84 என்ற நேரத்தில் இந்த இலக்கை எட்டினர். தாய்லாந்தை விட 13.93s தாமதம் ஆனது இந்திய அணி... தாய்லாந்து அணி பி பிரிவு சுற்றில் முதலிடத்தையும் ஒட்டு மொத்தமாக 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.
ஆசியன் விளையாட்டு போட்டிகள் - துப்பாக்கி சுடுதல் பிரிவில் தற்போது வரை மெஹுலி 3-வது இடத்திலும் ரமிதா 5-வது இடத்திலும் உள்ளார். அவர்கள் பெற்ற புள்ளிகளை (சராசரி) காணலாம்
மெஹுலி கோஷ் - 10.515
ரமிதா - 10.513
அஷி சவுக்சை - 10.409
மகளிர் கிரிக்கெட்: அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தத். இதன்படி இந்திய அணி பந்து வீசி வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச அணி திணறி வருகிறது.2.2 ஓவர்கள் நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.