ஆசிய உள்ளரங்க தடகள போட்டிக்கான இந்திய அணியில் 7 தமிழக வீரர், வீராங்கனைகள்
ஆசிய உள்ளரங்க தடகள போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.;
சென்னை,
10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டில் உள்ள அஸ்தானா நகரில் வருகிற 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்த போட்டிக்கான இந்திய அணியின் மானேஜராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இந்திய தடகள அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இலக்கிய தாசன் (60 மீட்டர் ஓட்டம்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), சிவசுப்பிரமணியம் (போல்வால்ட்), வீராங்கனைகள் அர்ச்சனா (60 மீட்டர் ஓட்டம்), ரோசி மீனா (போல்வால்ட்), பவித்ரா (போல்வால்ட்) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.