44-வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான 3-வது இந்திய அணி அறிவிப்பு - தமிழக வீரர்கள் தேர்வு

இந்திய அணியில் தமிழக வீரர்கள் கார்த்திகேயன், சேதுராமன் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.;

Update:2022-07-03 13:43 IST

Image Courtesy : @aicfchess

சென்னை,

44-வது சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" இம்மாதம் 28ம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் 188 நாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அந்நாட்டு ஊடகவியலாளர்கள் என 2,500-க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் வருகிறார்கள். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள 5 பேர் கொண்ட 3-வது இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழக வீரர்கள் கார்த்திகேயன், சேதுராமன் இடம்பெற்றுள்ளனர். இவர்களை இருவரை தவிர அபிமன்யு, அபிஜித் குப்தா, சூர்யா கங்குலி ஆகியோர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 28 ஆம் தேதி தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் அடுத்த மாதம் 10 ஆம் தேதி நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்