பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2–வது இடத்துக்கு முன்னேற்றம்
சர்வதேச பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.;
புதுடெல்லி,
சர்வதேச பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டனில் பட்டம் வென்று அசத்திய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 2–வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். உலக சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்து வரும் சீனா, ஹாங்காங் போட்டிகளில் ஸ்ரீகாந்த் வெற்றிகளை குவிக்கும் பட்சத்தில் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. மற்ற இந்தியர்கள் பிரனாய் 11–வது இடத்திலும், சாய் பிரனீத் 16–வது இடத்திலும் இருக்கிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2–வது இடத்தில் தொடருகிறார். சாய்னா நேவால் 11–வது இடம் வகிக்கிறார்.