ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவில் இன்று தொடங்குகிறது.

Update: 2024-09-08 03:17 GMT

கோப்புப்படம்

ஹூலுன்பியர்,

8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. மற்ற ஆட்டங்களில் தென்கொரியா- ஜப்பான், மலேசியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஜப்பானையும் (9ம் தேதி), 3வது லீக் ஆட்டத்தில் மலேசியாவையும் (11ம் தேதி), 4வது லீக் ஆட்டத்தில் கொரியாவையும் (12ம் தேதி), 5வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானையும் (14ம் தேதி) சந்திக்கிறது. அரையிறுதி ஆட்டங்கள் 16ம் தேதியும், இறுதிப்போட்டி 17ம் தேதியும் நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்