பெண்கள் நேசன்ஸ் ஆக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
8 அணிகள் இடையிலான பெண்களுக்கான நேசன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஸ்பெயினின் வலேன்சியா நகரில் நடந்து வருகிறது.
வலேன்சியா,
8 அணிகள் இடையிலான பெண்களுக்கான நேசன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஸ்பெயினின் வலேன்சியா நகரில் நடந்து வருகிறது.
இதில் 'பி' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி நேற்று தனது 3-வது லீக்கில் 2-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. தீப் எக்கா கிரேஸ், குர்ஜித் கவுர் ஆகியோர் இந்திய அணியில் கோல் போட்டனர்.
ஏற்கனவே சிலி, ஜப்பானை வீழ்த்திய இந்தியா 3 வெற்றிகளுடன் அரைஇறுதியை எட்டியது. இந்திய அணி அரைஇறுதியில் அயர்லாந்தை நாளை எதிர்கொள்கிறது.