தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்;மத்தியப்பிரதேச அணி சாம்பியன்....!!

13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜார்கண்ட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் விழ்த்தி மத்தியப்பிரதேச அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

Update: 2023-07-09 05:11 GMT

image courtesy;twitter/@TheHockeyIndia

ஒடிசா,

13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பிஸ்ரா முண்டா ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது .28 அணிகள் இடம் பெற்றிருந்தன.இதில் மத்தியப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

அரையிறுதியில் மத்தியப்பிரதேச அணி நடப்பு சாம்பியனான அரியானா அணியை விழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஜார்கண்ட் அணி சத்தீஸ்கர் அணியை விழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. மத்தியப்பிரதேச அணியின் முன்கள வீராங்கனை குர்மெயில் கவுர் ஜார்கண்ட் அணியின் தடுப்பு அரணை உடைத்து கோல் அடித்தார்.அதுவே வெற்றிக்குரிய கோலாகவும் அமைந்தது.இதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் மத்தியப்பிரதேச அணி ஜார்கண்ட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் விழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.மத்தியப்பிரதேச அணி இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டியில் நடப்பு சாம்பியன் அரியானா மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோதின. இதில் அரியானா அணி 12-2 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கர் அணியை விழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்