தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்;லீக் ஆட்டங்களில் கர்நாடகா,மத்தியப் பிரதேசம்-பஞ்சாப் அணிகள் வெற்றி....!!
தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஒடிசா,
13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி அரங்கில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் மொத்தம் 28 அணிகள் இடம் பெற்றுள்ளன.அவை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.
இந்த தொடருக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடந்த 3-வது நாள் லீக் ஆட்டங்களில் கர்நாடகா,மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றிகளை பதிவு செய்தன.
நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் கர்நாடகா மற்றும் லு புதுச்சேரி அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணி வெற்றி பெற்றது.கர்நாடக அணி வீராங்கனை யமுனா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்
இரண்டாவது ஆட்டத்தில் மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு&காஷ்மீர் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தியது.போட்டி முடிவில் மத்திய பிரதேச அணி 21-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு & காஷ்மீர் அணியை வீழ்த்தி மெகா வெற்றியை பதிவு செய்தது.மத்திய பிரதேச அணியில் பூமிஷா சாகு 6 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
மூன்றாவது ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் பஞ்சாப் அணி 5-0 என்ற கோல் கனக்கில் ஹிமாச்சல அணியை விழ்த்தியது.