சூப்பர் டிவிசன் ஆக்கி: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி..!

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் நடந்து வருகிறது.

Update: 2022-07-12 00:51 GMT

சென்னை,

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு போலீஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை துறைமுகத்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை தோற்கடித்தது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் சென்னை மாநகர போலீஸ்-இந்திய உணவு கழகம் (பிற்பகல் 2 மணி), வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்