சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு விருதுகள்: சிறந்த வீரராக இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் தேர்வு

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹர்மன்பிரீத் சிங் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-10-07 18:42 GMT

Image Courtesy: PTI   

புதுடெல்லி,

சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. சர்வதேச அளவில் வழங்கப்படும் இந்த விருதுகளுக்கு பல நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகளும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.

இதில் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட 2021-22-க்கான வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதை இந்திய மகளிர் சீனியர் ஆக்கி அணியின் வீராங்கனை மும்தாஜ் கான் தட்டி சென்றார். அதே போல் ஆடவர் பிரிவில் சிறந்த கோல் கீப்பருக்கான விருது ஸ்ரீஜேஷ்-க்கும் மற்றும் மகளிர் பிரிவில் சிறந்த கோல் கீப்பருக்கான விருது இந்திய ஆக்கி அணியின் கேப்டன் சவிதா புனியாவுக்கும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஆடவர் பிரிவில் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது இந்தியாவின் நட்சத்திர வீரர் ஹர்மன்பிரீத் சிங்-க்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற நான்காவது வீரர் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் சிங் பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்