எப்.ஐ.எச்.புரோ லீக் ஆக்கி: இந்திய அணியை வீழ்த்தி ஸ்பெயின் திரில் வெற்றி

ஸ்பெயின் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

Update: 2022-10-30 15:45 GMT

Image Tweeted By sports_odisha

புவனேஸ்வர்,

எப்.ஐ.எச். புரோ லீக் ஆக்கி 2022-2023ன் சீசன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று இந்திய அணி தனது 2-வது போட்டியில் வலுவான ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியின் 16-வது நிமிடத்தில் எட்வர்ட் டி இக்னாசியோ-சிமோ ஸ்பெயின் அணியின் முதல் கோலை அடிக்க, மார்க் மிரல்லெஸ் 26-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (26-வது நிமிடம்) மற்றும் அபிஷேக் (54--வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் போட்டி சமநிலையில் இருந்தது. ஆனால் இறுதி கட்டத்தில் ஸ்பெயின் சார்பாக மார்க் ரெய்ன் 56-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஸ்பெயின் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்