பெண்கள் உலக கோப்பை ஆக்கி : ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி..!!
காலிறுதி சுற்றுக்கு நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஆம்ஸ்டெல்வீன்,
15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது.
அதை தொடர்ந்து சீனாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியும் 1-1 என்ற கணக்கில் டிராவானது. இந்திய அணி இன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை ஆக்கி போட்டியின் காலிறுதி சுற்றுக்கு நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா முதல் இரண்டு அணிகள் தகுதி பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.