தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்; காலிறுதி சுற்றில் அரியானா மற்றும் மத்திய பிரதேச அணிகள் வெற்றி

13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் ஓடிசா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பிஸ்ரா முண்டா ஆக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Update: 2023-07-05 07:08 GMT

image courtesy;twitter/@TheHockeyIndia

ஒடிசா,

தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.இந்த தொடருக்கான லீக் ஆட்டங்கள் முடிவடைந்து உள்ளன.

லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் அரியானா,மத்திய பிரதேசம்,மராட்டியம்,பஞ்சாப்,ஜார்கண்ட்,மிசோரம்,ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய அணிகள் காலிறுதி சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடை பெற்ற முதலாவது காலிறுதி ஆட்டத்தில் சரிசம பலம் வாய்ந்த மராட்டியம் மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பாரா விதமாக இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத மராட்டிய அணி 9-0 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேச அணியிடம் விழ்ந்தது. இந்த வெற்றியின் மூலம் மத்திய பிரதேச அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

மற்றொரு காலிறுதி போட்டியில் அரியானா மற்றும் பஞ்சாப் அணிகள் பலபரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரியானா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை விழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மற்ற காலிறுதி ஆட்டங்களில் ஜார்கண்ட் - மிசோரம் மற்றும் ஒடிசா- சத்தீஸ்கர் அணிகள் மோத உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்