உலகக்கோப்பை ஆக்கி அட்டவணை வெளியீடு- முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது இந்தியா

இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை ஜனவரி 13ஆம் தேதி எதிர்கொள்கிறது.

Update: 2022-09-27 18:55 GMT

Image Courtesy: PTI 

புவனேஸ்வர்,

ஆக்கி உலகக் கோப்பை தொடர் அடுத்த ஜனவரி 13 முதல் 29 வரையில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன.

இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ,பி,சி,டி பிரிவுகளில் இடம் பெற்றுள்ள அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்திய அணி 'டி' பிரிவில் ஸ்பெயின்,வேல்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகளோடு இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த தொடருக்கான முழு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. ஜனவரி 13 அன்று தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் அர்ஜென்டினா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அதே நாளில் புவனேஸ்வரில் நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியா பிரான்சை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை ஜனவரி 13ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதை தொடர்ந்து இந்திய அணி 15-ஆம் தேதி இங்கிலாந்து அணியுடனும் 19-ஆம் தேதி வேல்ஸ் அணியுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது.

மொத்தம், 44 போட்டிகள் கொண்ட உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி 29 அன்று புவனேஸ்வரில் நடைபெறவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்