எப்.ஐ.எச். புரோ லீக் ஆக்கி: தோல்வியில் இருந்து மீளுமா இந்திய அணி?- நியூசிலாந்து அணியுடன் நாளை மோதல்

முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் நியூசிலாந்து வீரர்கள் களமிறங்குவார்கள்.

Update: 2022-11-02 18:47 GMT

Image courtesy: Twitter @TheHockeyIndia

புவனேஸ்வர்,

எப்.ஐ.எச். புரோ லீக் ஆக்கி 2022-2023ன் சீசன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி முதல் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நாளை (நவம்பர் 4) மீண்டும் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணி தனது கடைசி நிமிட கோல்களால் திரில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் நாளைய போட்டியில் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் நியூசிலாந்து வீரர்கள் களமிறங்கக்கூடும். அதே நேரத்தில் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும். இந்த போட்டியை தொடர்ந்து நவம்பர் 6 ஆம் தேதி இந்திய அணி, ஸ்பெயின் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்