ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி...!!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
சலாலா,
அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் செவ்வாய்கிழமை தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் 2 போட்டிகளில் வங்காளதேசம் மற்றும் ஓமனை வீழ்த்தி மெகா வெற்றிகளை பதிவு செய்து இருந்தது.
இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சிங் மனிந்தர் 2 கோல்களும் , சிங் குர்ஜோத் மற்றும் ரஹீல் முகமது தலா ஒரு கோலும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் லியாகத் அர்ஷாத் 2 கோல்களும், ஹயாத் ஜிக்ரியா, அப்துல் ரஹ்மான் மற்றும் ராணா அப்துல் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் இன்று மலேசியாவுடன் மோத உள்ளது.