ஆசிய கோப்பை ஆக்கி: தென் கொரியா அணியை வீழ்த்தி மலேசியா வெற்றி

மலேசிய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

Update: 2023-08-09 15:47 GMT

சென்னை,

ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மாலை 6.15 மணிக்கு தொடங்கி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மலேசியா-தென்கொரியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் மலேசியா அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஒரு கோல் அடித்தது. இதனால் மலேசியா அணி முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அடுத்து இரு அணிகளும் கடைசி வரை போராடியும் கோல்கள் அடிக்கப்படவில்லை. இந்த வெற்றியின் மூலம் மலேசிய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்