தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்; லீக் சுற்று மத்தியப் பிரதேசம் ,மிசோரம் அணிகள் வெற்றி....!!

தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-07-03 05:10 GMT

image courtesy;twitter/@TheHockeyIndia

ஒடிசா,

13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஆக்கி அரங்கில் நடைபெற்று வருகிறது.இந்த தொடருக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த 6-வது நாள் லீக் ஆட்டங்களில் மத்தியப் பிரதேசம் ,மிசோரம் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடக அணிகள் மோதின.பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது.ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக பலம் வாய்ந்த கர்நாடக அணி மத்தியப் பிரதேச அணியிடம் முழுவதுமாக சரணடைந்தது.இந்த ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் மத்தியப் பிரதேச அணி கர்நாடகாவை விழ்த்தி வெற்றி பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் மிசோரம் மற்றும் சண்டிகர் அணிகள் பலபரீட்சை நடத்தின.இந்த ஆட்டத்தில் மிசோரம் அணி 6-0 என்ற கோல் கணக்கில் சண்டிகர் அணியை எளிதில் விழ்த்தி வெற்றி பெற்றது.

நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் மணிப்பூர் இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்