தேசிய கால்பந்து போட்டிக்கான தமிழக பெண்கள் அணி அறிவிப்பு

28-வது தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கொல்கத்தாவில் நாளை முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.;

Update:2024-04-30 04:54 IST

கோப்புப்படம் 

சென்னை,

28-வது தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கொல்கத்தாவில் நாளை முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக பெண்கள் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி வீராங்கனைகள் வருமாறு:-

சவுமியா, கார்த்திகா, மாளவிகா (மூவரும் சேலம்), ஷர்மிளா, கவுசல்யா (இருவரும் திண்டுக்கல்), தேவி, சண்முகபிரியா, அம்சவல்லி, சந்தியா, காவியா (5 பேரும் கடலூர்), இந்திராணி, சந்தியா, ஸ்ருதி, மதுமதி (4 பேரும் சென்னை), துர்கா (ராமநாதபுரம்), பவித்ரா, பிரியதர்ஷினி (இருவரும் திருவாரூர்), வினோதினி, ஐஸ்வர்யா (இருவரும் கோவை), பாயதாசரி அனிதா (மதுரை).

தலைமை பயிற்சியாளர்: வி.கலா, உதவி பயிற்சியாளர்: சதீஷ் குமாரி, மேனேஜர்: நந்தினி.

Tags:    

மேலும் செய்திகள்