1,000 கோல்கள் அடிக்க விரும்புகிறேன்...ரொனால்டோ ஓபன் டாக்
ரொனால்டோ தற்போது ஒட்டுமொத்தமாக 899 கோல்கள் அடித்துள்ளார்;
ரியாத்,
உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதான ரொனால்டோ தற்போது கிளப் போட்டிகளில் சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக உள்ள ரொனால்டோ தற்போது ஒட்டுமொத்தமாக 899 கோல்கள் அடித்துள்ளார். விரைவில் 900 கோல்களை அடித்து சாதனை படைக்க இருக்கிறார். இந்த நிலையில், 1,000 கோல்கள் அடிக்க விரும்புகிறேன் என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,"முதலில் நான் 900 கோல்களை அடிக்க வேண்டும். அடுத்து 1,000 கோல்கள் அடிக்க விரும்புகிறேன். அது தான் என் இலக்கு. என தெரிவித்துள்ளார்.