உலக கோப்பை தொடர்: பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது நெதர்லாந்து அணி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத்,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை நெதர்லாந்து அணி எதிர்கொள்கிறது. நியூசிலாந்தை வீழ்த்துவதற்கு நெதர்லாந்து வீரர்கள், தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
ஐதராபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டமானது, இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.