உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு!

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Update: 2023-11-09 08:05 GMT

image courtesy; twitter/ @ICC 

பெங்களூரு,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 41-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.

நியூசிலாந்து அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை துவம்சம் செய்து தனது பயணத்தை கம்பீரமாக தொடங்கியது. அதன் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளிடம் வரிசையாக தோற்று தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இன்றைய ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்