உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு...!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைப்பெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
சென்னை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
கடந்த இரு ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ள பாகிஸ்தான் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.