பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.;

Update: 2023-02-13 21:02 GMT

கேப்டவுன்,

10 அணிகள் இடையிலான பெண்களுக்கான 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது.

இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

ஆனால், தென் ஆப்பிரிக்க அணியின் அசத்தல் பந்துவீச்சு காரணமாக நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் அந்த அணி 18.1 ஓவர்களில் 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்