பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
இன்று கேப்டவுனில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
கேப்டவுன்,
8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் இன்று கேப்டவுனில் நடைபெறும் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.