பெண்கள் டி20 உலகக்கோப்பை; பாகிஸ்தானுக்கு 111 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Update: 2024-10-14 16:07 GMT

Image courtesy: @WHITE_FERNS

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுசி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா ப்ளிம்மர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜார்ஜியா ப்ளிம்மர் 17 ரன்னிலும், சுசி பேட்ஸ் 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய அமெலியா கெர் 9 ரன், சோபி டெவின் 19 ரன், ப்ரூக் ஹாலிடே 22 ரன், மேடி கிரீன் 9 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 111 ரன் எடுத்தால் வெற்றி என்றன் இலக்குடன் பாகிஸ்தான் அணி ஆடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்