பெண்கள் டி20 கிரிக்கெட்; ஹீதர் நைட் அபாரம் - நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

நியூசிலாந்து வெற்றிக்காக போராடிய சுசி பேட்ஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

Update: 2024-03-19 06:33 GMT

Image Courtesy: @ICC

டுனெடின்,

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அபாரமாக ஆடிய ஹீதர் நைட் 63 ரன்கள் அடித்து அசத்தினார். நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர், பிரான் ஜோனாஸ், லியா தஹுஹு ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து வெற்றிக்காக போராடிய சுசி பேட்ஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இங்கிலாந்து அணி தரப்பில் லாரன் பெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்