பெண்கள் டி20 கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு..!

முதலாவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Update: 2023-12-09 13:09 GMT

image courtesy: BCCI Women twitter

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 38 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்