பெண்கள் பிரீமியர் லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி

19 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.

Update: 2024-03-06 17:32 GMT

புதுடெல்லி,

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு தொடக்க வீராங்கனைகள் பெத் மூனி - லாரா வோல்வார்ட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இவர்களை தவிர அந்த அணியில் யாரும் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 85 ரன்களும், லாரா வோல்வார்ட் 76 ரன்களும் குவித்தனர். பெங்களூரு அணியில் சோபி மோலினியூ மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்தது . அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா வேர்ஹாம் 48 ரன்கள் எடுத்தார்.

குஜராத் சார்பில் ஆஷ்லே கார்ட்னர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்