பெண்கள் பிரிமீயர் லீக்: குஜராத்தை 105 ரன்னில் சுருட்டிய டெல்லி...மரிசான் கேப் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்...!
பெண்கள் பிரிமீயர் லீக்க்கின் இன்றைய ஆட்டத்தில் குஜராத்- டெல்லி அணிகள் மோதி வருகின்றன.
மும்பை,
ஆண்களுக்கான ஐபிஎல் தொடர் போலவே பெண்களுக்கான (டபிள்யூ.பி.எல்) பெண்கள் பிரிமீயர் லீக்கின் முதலாவது சீசன் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக சப்பினேனி மேகனா, லாரா வோல்வார்ட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இதில் மேகன 0 ரன்னிலும், வோல்வார்ட் 1 ரன்னிலும், அடுத்து வந்த ஆஷ்லே கார்ட்னர், தயாளன் ஹேமலதா தலா 0, 5 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆகினர். இதனால் அந்த அணி 18 ரன்னுக்குள் 4 விகெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து ஹார்லீன் தியோலுடன், ஜார்ஜியா வேர்ஹாம் ஜோடி சேர்ந்தார். இதில் ஹார்லீன் 20 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த சுஷ்மா வர்மா 2 ரன்னில் வீழ்ந்தார். சுஷ்மா வர்மாவை வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மரிசான் கேப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெய் இழப்புக்கு 105 ரன்களே எடுத்தது. அந்த அணி தரப்பில் கிம் கார்த் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் மாரிசான் கேப் 5 விக்கெட்டும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டும் ராதா யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி ஆட உள்ளது.