பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சினெல்லே ஹென்றி, ராம்ஹராக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Update: 2024-04-22 04:15 GMT

Image Courtesy: @ICC

கராச்சி,

வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக மரூப் 65 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சினெல்லே ஹென்றி, ராம்ஹராக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஸ்டாபானி டெய்லர் 73 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நிதா டார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்