மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு...!

முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து வங்கதேசம் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

Update: 2023-07-19 03:34 GMT

Image Courtesy: @BCCIWomen

டாக்கா,

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து வங்கதேசம் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்