இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி... டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
துபாய்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி நிறைவடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்திய அணி கூடுதலாக புள்ளிகள் பெற்று முன்னிலையை வலுப்படுத்தி உள்ளது. இங்கிலாந்து சரிவை சந்தித்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:-
1. இந்தியா - 68.51%
2. நியூசிலாந்து - 60.00%
3. ஆஸ்திரேலியா - 59.09%
4. வங்காளதேசம் -50.00%
5. பாகிஸ்தான் - 36.66%
6. வெஸ்ட் இண்டீஸ் - 33.33%
7. தென் ஆப்பிரிக்கா - 25.00%
8. இங்கிலாந்து - 17.5%
9. இலங்கை - 00.00%