4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா மும்பை...ஐதராபாத்துடன் இன்று மோதல்...!
ஐபிஎல் தொடரில் குஜராத், சென்னை, லக்னோ அணிகள் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.;
மும்பை,
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் மும்பை-ஐதராபாத், குஜராத்-பெங்களூரு அணிகள மோதுகின்றன. இதில் குஜராத் அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. ஐதராபாத் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
எஞ்சி உள்ள ஒரு பிளே ஆப் இடத்துக்கு மும்பை, பெங்களூரு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்றைய ஐதராபாத்துக்கு எதிரான 69வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்க உள்ளது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் மும்பை அணிக்கு அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். ஏனெனில், மும்பை இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். மேலும், பெங்களூரு அணி குஜராத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வி அடைய வேண்டும். இந்த அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே மும்பை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
முதலில் மும்பை அணியினர் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையில் ஆடுவர். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.