நாங்கள் என்ன இந்தியாவின் வேலையாட்களா ? - ரமீஸ் ராஜா விரக்தி பேச்சு

,பிசிசிஐ மீது ரமீஸ் ராஜா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.;

Update:2022-12-30 16:26 IST

கராச்சி ,

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையேயான மோதல் உலக கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஆசியக் கோப்பைக்கான இடத்தை பாகிஸ்தானில் இருந்து நடுநிலையான இடத்திற்கு மாற்ற விரும்பியதை அடுத்து அக்டோபரில் வார்த்தைப் போர் தொடங்கியது. இந்திய அணி ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று அக்டோபரில் ஷா தெரிவித்தார். 

இந்நிலையில்,பிசிசிஐ மீது ரமீஸ் ராஜா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அணி, சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என முழுமையாக இழந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா நீக்கப்பட்டார்.,புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிசிசிஐ குறித்து ரமீஸ் ராஜா கூறியதாவது ,

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தானிடம் ஒரு போட்டியை நடத்துமாறு கேட்டுக் கொண்டதும், பின்னர் அவர்கள் (பிசிசிஐ ) பாகிஸ்தானுக்குச் செல்ல மாட்டோம் என்றும் போட்டியை நடுநிலையான இடத்திற்கு மாற்றுவோம் என்றும்  கூறும்போது, என்ன பதில் சொல்ல வேண்டும்? கிரிக்கெட்டில் உலக வல்லரசாக இருப்பதாலேயே நாம் என்ன இந்தியாவின் வேலையாட்களா ? அவர்கள் சொல்வதையெல்லாம் நாம் கேட்க வேண்டுமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நமக்கு நல்ல ரசிகர்கள் உள்ளனர்; சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். எனவே நமது அணிக்கும் ரசிகர்களுக்கும் உரிய மரியாதையை கொடுங்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்