டி20 உலகக்கோப்பை போட்டியின்போது தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டலால் அதிர்ச்சி

டி20 உலகக்கோப்பை போட்டியின்போது பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

Update: 2024-05-06 11:26 GMT

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 28 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தத் தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையின்போது வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள போட்டிகளில் தாக்குதல் நடத்துவோம் என்று  பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. இந்த மிரட்டல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இருப்பினும் எத்தகைய சவாலையும் சந்திக்கும் விதமாக உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்