இந்தியா உலககோப்பையை வெல்ல வந்துள்ளது..! நாங்கள் அதற்கு வரவில்லை : வங்காளதேச கேப்டன் ஷகிப்

சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் நாளை இந்திய அணி வங்காள தேசத்துடன் மோதுகிறது.

Update: 2022-11-01 10:18 GMT

பிரிஸ்பேன்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் நாளை இந்திய அணி வங்காள தேசத்துடன் மோதுகிறது.

போட்டிக்கு முன்னர் பேட்டியளித்த வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியதாவது ;

ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த அணுகுமுறையுடன் விளையாட விரும்புகிறோம். ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக கவனம் செலுத்த விரும்பவில்லை. நாங்கள் எங்களுடைய திட்டத்தில் உறுதியாக இருக்க விரும்புகிறோம்.

உலகக்கோப்பையில் எங்களுடைய வீரர்களில் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலைப்படவில்லை. போட்டியில் அனைத்து துறையிலும் ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கவனம் வெலுத்துகிறோம். மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாட விரும்புகிறோம். இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தால், அது வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எங்களுடன் சிறந்த அணி. நாங்கள் சிறப்பாக விளையாடி, எங்களுடைய நாளாக அமைந்தால், நாங்கள் வெற்றி பெற முடியாததற்கான காரணம் இருக்க முடியாது. அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்தையும், பாகிஸ்தானையும் வீழ்த்தியதை நாம் பார்த்திருக்கிறோம். அதே வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தால், நான் மகிழ்ச்சியடைவேன்.

இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியா எங்கே விளையாடினாலும், ரசிகர்கள் அவர்களுக்கு சிறப்பான ஆதரவு கொடுக்கிறார்கள். சிறந்த ஆட்டமாக இருக்கும் என நினைக்கிறேன். போட்டியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அவர்கள் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கே வந்துள்ளனர். நாங்கள் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கே வரவில்லை. இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றால், அது வருத்தமாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, அவர்களுக்கு அப்செட் அடைய செய்ய முயற்சி செய்வோம் . 

Tags:    

மேலும் செய்திகள்