இந்தியா - ஆஸ்திரேலியா தொடரை ஜியோ சினிமாவில் இலவசமாகப் பார்க்கலாம் - வெளியானது அறிவிப்பு

இந்தியா - ஆஸ்திரேலியா தொடரை ஜியோ சினிமா செயலியில் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-14 13:41 GMT

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டி  நடைபெறுகிறது. செப்டம்பர் 22 ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது.50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறுவதால் இந்தத் தொடர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் முக்கியமானது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரை ஜியோ சினிமா செயலியில் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்