தென் ஆப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பும் விராட் கோலி...முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் மீண்டும் அணிக்கு திரும்புவார் என தகவல்!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது.

Update: 2023-12-22 08:41 GMT

image courtesy;AFP

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்தது. அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி சில தினங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கா சென்று பயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து விராட் கோலி தாயகம் திரும்பவுள்ளார்.

இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்