ஐ.சி.சி தொடரில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி...!

ஐ.சி.சி தொடரில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி ஆவார்.

Update: 2023-10-23 08:21 GMT

சென்னை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்றது. இதில், இந்தியா - நியூசிலாந்து மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடியது. இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் விராட் கோலி 95 ரன்களை குவித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் குவிப்பு பட்டியலில் இந்தியாவின் விராட்கோலி (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 354 ரன்) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் ரோகித் சர்மா (311 ரன்) உள்ளார்.

இந்நிலையில் ஐ.சி.சி தொடரில் 3 ஆயிரம் ரன்களையும் விராட் கோலி கடந்துள்ளார். இந்த தொடரில் அவர் அடித்த  354 ரன்களையும் சேர்த்து மொத்தம் 3054 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் ஐ.சி.சி தொடரில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்