இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன தெரியுமா..?

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 106 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

Update: 2024-02-05 10:07 GMT

Image Courtesy: AFP

துபாய்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து-இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து 5வது இடத்திற்கு சரிந்த இந்தியா தற்போது வெளியிட்ட பட்டியலில் ஏற்றம் கண்டு 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும் (55%), 2வது இடத்தில் இந்தியாவும் (52.77%), 3 முதல் 5 இடங்களில் முறையே தென் ஆப்பிரிக்கா (50%), நியூசிலாந்து (50%), வங்காளதேசம் (50%) ஆகிய அணிகள் உள்ளன. 6 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), இங்கிலாந்து (25%), இலங்கை (0%) உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்