நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி...இந்திய அணியை பாராட்டிய பிரதமர் மோடி...!

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

Update: 2023-10-23 01:32 GMT

தர்மசாலா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

நியூசிலாந்துக்கு எதிரான அபார வெற்றிக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது ஒரு அற்புதமான குழு முயற்சியாகும், அங்கு அனைவரும் பங்களித்தனர். களத்தில் வீரர்களின் அர்ப்பணிப்பும் திறமையும் முன்மாதிரியாக இருந்தது. இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்