'மார்னிங் இந்தியா' ஜோ ரூட்டை வைத்து விராட் கோலியை மறைமுகமாக கலாய்த்த வாகன்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.

Update: 2024-08-31 01:29 GMT

லண்டன்,

இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், 2-வது போட்டி நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 427 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களும், கஸ் அட்கின்ஷன் 118 ரன்களும் அடித்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் "மார்னிங் இந்தியா" என்ற பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோரின் பேட்டிங் புள்ளி விவரங்களை மைக்கேல் வாகன் பதிவிட்டுள்ளார். அதில் விராட் கோலி இதுவரை 191 இன்னிங்ஸில் 29 சதங்கள் 30 அரை சதங்கள் 26 சிக்ஸர்கள் உட்பட 8848 ரன்களை 49.15 என்ற சராசரியில் 55.57 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளதாக எழுதப்பட்டுள்ளது. அதிகபட்ச ஸ்கோர் 254* ரன்கள்.

மறுபுறம் இங்கிலாந்தின் ஜோ ரூட் 263 இன்னிங்ஸில் 32 சதங்கள் 64 அரை சதங்கள் 44 சிக்ஸர்கள் உட்பட 12131 ரன்களை 50.33 என்ற சராசரியில் 56.70 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளதார். அதிகபட்ச ஸ்கோர் 254 ரன்கள்.

இதிலிருந்து ஜோ ரூட் தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன் என்று மைக்கேல் வாகன் மறைமுகமாக விராட் கோலியை கலாய்த்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்