வருண் அதை செய்வதால் என்னுடைய வேலை எளிதாகிறது - சுனில் நரேன்

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 54வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

Update: 2024-05-06 11:34 GMT

Image Courtesy: X (Twitter)

லக்னோ,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 54வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 235 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சுனில் நரேன் 81 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய லக்னோ 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 137 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கொல்கத்தா 98 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 36 ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் அபாரமாக பேட்டிங் ஆடிய சுனில் நரேனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

பேட்டிங்கில் நன்றாக துவங்குவது மிகவும் முக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன். பயிற்சியாளர்கள் குழுவினர் எனக்கு ஆதரவு கொடுக்கின்றனர். அது எனக்கு வேலை செய்கிறது. எஞ்சிய தொடரிலும் அது எனக்கு வேலை செய்யும் என்று நம்புகிறேன். இவை அனைத்தும் போட்டி நாளன்று உங்களுடைய பலத்திற்கு தகுந்தார் போல் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை பொருத்ததாகும்.

நீங்கள் கொஞ்சம் சாதுரியமாகவும் செயல்பட வேண்டும். சில நேரங்களில் அது வேலை செய்யும். சில நேரங்களில் வேலை செய்யாது. வருண் சக்கரவர்த்தியுடன் சேர்ந்து பந்து வீசுவது நன்றாக செல்கிறது. அவர் விக்கெட்டுகளை எடுப்பது என்னுடைய வேலையை எளிதாக்குகிறது. அவர் மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்