உம்ரான் மாலிக் இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவர் - ரவி சாஸ்திரி

உம்ரான் மாலிக்கிற்கு இது சிறந்த வாய்ப்பு. இந்த வெளிப்பாட்டில் இருந்து அவர் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன்'' என்றார்.

Update: 2022-11-18 10:33 GMT

Image Courtesy : AP 

வெலிங்டன்,

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் உள்ளார். உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததும் பேட்டிங் அணுகுமுறை, அதிவேக பந்து வீச்சாளர் ஆகியோர் இல்லாததே தோல்விக்கு காரணம என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் உம்ரான் மாலிக் குறித்து பேசியுள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ;

உம்ரான் மாலிக் இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவர். உலகக் கோப்பையில் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியை கலங்கடித்தார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அதற்கு உதாரணம் ஹாரிஷ் ராப், நசீம் ஷா, அன்ரிச் நோர்ஜே. ஆகவே, உண்மையாக வேகத்திற்கு மாற்று இல்லை. குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் கூட எதிரணியை சமாளிக்க முடியும். ஆகவே, உம்ரான் மாலிக்கிற்கு இது சிறந்த வாய்ப்பு. இந்த வெளிப்பாட்டில் இருந்து அவர் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்