மிக்கி ஆர்தர்-வக்கார் யூனுசால் கிரிக்கெட் வாழ்க்கை பாழாகிவிட்டது என புலம்பும் உமர் அக்மல்

உமர் அக்மல் பல சந்தர்ப்பங்களில் உடற்தகுதி பிரச்சினையில் தீவிரம் காட்டவில்லை என்று மிக்கி ஆர்தர் குற்றம் சாட்டியிருந்தார்

Update: 2022-06-15 12:28 GMT

இஸ்லாமாபாத்

மேட்ச் பிக்சிங் புகார் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் வக்கார் யூனுஸ் ஆகியோரால் தான் சர்வதேச கிரிக்கெட்டில் தனது வாழ்க்கை பாழாகிவிட்டது என குற்றம்சாட்டி உள்ளார்.

மிக்கி ஆர்தருக்கு என்மீது தனிப்பட்ட விரோதங்கள் இருந்தன. அப்போது எனக்காக அணி நிர்வாகம் குரல் கொடுக்கவில்லை. இந்த விஷயத்தில் நிர்வாகம் இன்று வரை மவுனம் காத்து வருகிறது. ஆர்தரே எனக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கவனிக்கப்படாத வீரர்களில் நானும் ஒருவன்.

என்னை மூன்றாம் இடத்தில் விளையாட விடும்படி இம்ரான் கான் அணி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார். ஆனால் வக்கார் என்னை டாப் ஆர்டரில் சேர்க்கவில்லை. வக்கார் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். ஆனால் அவர் பயிற்சியாளராக இருந்த காலம் எனக்கு சரியில்லை என வேதனையுடன் கூறினார்.

உமர் அக்மல் பல சந்தர்ப்பங்களில் உடற்தகுதி பிரச்சினையில் தீவிரம் காட்டவில்லை என்று மிக்கி ஆர்தர் குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும், மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் காரணமாக, உமர் அக்மல் அணிக்கு திரும்புவதற்கான கதவுகள் கிட்டத்தட்ட மூடப்பட்டு விட்டன.

Tags:    

மேலும் செய்திகள்