19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் - அமெரிக்க அணியில் அனைவரும் இந்திய வம்சாவளியினர்!

அமெரிக்க அணியில் உள்ள வீராங்கனைகள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2022-12-16 14:38 IST

வாஷிங்டன்,

தென் ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அமெரிக்க வீராங்கனைகளின் பெயர் பட்டியலை அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி 15 பேர் கொண்ட அமெரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அமெரிக்க மகளிர் அணியின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள், இது அமெரிக்க அணியா? அல்லது இந்திய 'பி' அணியா என நகைச்சுவையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த அணியில் உள்ளவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியினர் என்றாலும், அவர்கள் அனைவரும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்