டிஎன்பிஎல்: சேலம் அணிக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
சேலம்,
8வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.